பாய்ந்தோடும் எலிகளை
துரத்திப் பிடிப்பதில்லை மதில் விட்டுமதில் தாவி
களவு ருசி கண்டதில்லை
கதவுச்சந்தும் இருண்டமூலைகளும்
அதன் இருப்பிடம்
காற்றில் நகர்ந்தோடும்
பாலிதீன் பைகளோடும்
நுனியாடும் திரைச் சீலைகளோடும்
அதற்க்கு விளையாட்டு
அம்மாவிற்கு அதன்மீது மிகுவாஞ்சை
டைகர் என்றழைத்து
ஊற்றிவைக்கிற பாலையருந்த
தவழ்ந்த நிலையில்
ஒருகுழந்தையை நினைவூட்டியபடி
நகர்ந்துவருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக