சனி, 2 அக்டோபர், 2010

விடாது பெய்கின்றன சொற்களின் மழை

விடாது பெய்கின்றன சொற்களின் மழை


சொற்களில் நனையப் பயந்தவர்கள்

அவசரமாய் ஒதுங்குகிறார்கள்,



சொற்களின் மழையில்

விரல் நீட்டி விளையாடுகின்றன குழந்தைகள்,



காகிதங்களில் கப்பல்கள் செய்து

மிதக்க விடுகிறர்கள் சிறுவர்கள்,



சொற்களில் துலக்கிப்பாத்திரங்களை

மினுமினுப்பாக்குகிறார்கள் பெண்டிர்!



தேங்கிய சொற்களை

தாண்டிச்செல்கிறார்கள் பெரியவர்கள்.



சொற்களில் நனைந்த கவிஞன்

வலிந்த சொற்களில்

இந்த கவிதையைக் கண்டு எடுக்கிறான்

2 கருத்துகள்:

  1. "நான் இறந்துப் போயிருந்தேன்..."
    இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...

    நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
    இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
    இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
    தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..

    உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
    என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
    அல்லது

    உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....

    முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
    Start MUSIC.......

    பதிலளிநீக்கு
  2. தங்களது வருகைக்கு நன்றி நான் இறந்து போயிருந்தேன் தலைப்பில் இரண்டு நாளில் கவிதை அனுபிவைக்கிறேன் கவிதை பருகக்காத்திருங்கள் நன்றி - ரவிஉதயன்

    பதிலளிநீக்கு